Sunday, January 26, 2014

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்குவிப்பு பயிற்சி முகாம்

அரசு பொதுத்தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை, ஜே.கே., பவுண்டேஷன் இணைந்து திருக்கோவிலூர் ஞானானந்தா மேல்நிலைப் பள்ளியில் ஊக்குவிப்பு பயிற்சி நடந்தது.

அதிக மதிப்பெண் பெறுவது, தேர்வை பயமின்றி எதிர்கொள்வது குறித்து சிகரம் தொடு அமைப்பை சேர்ந்த கீர்த்தன்யா மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரகண்ட நல்லூர், விளந்தை, ஜி.அரியூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த பிளஸ் 2 மாணவ, மாணவிகள் 720 பேர் கலந்து கொண்டனர்.
ஞானானந்தா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஹேமலதா வரவேற்றார். சி.இ.ஓ., மார்ஸ், பள்ளி தாளாளர் முகில்வண்ணன் முன்னிலை வகித்தனர். பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் லதா பேசினார்.
பள்ளி துணை ஆய்வாளர் ராமகிருஷ்ணன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment