Tuesday, January 21, 2014

அரசு விடுதிகளில் உள்ளூர் மாணவர்கள்: அதிகாரிகளின் திடீர் ஆய்வு அவசியம்

வருசநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் வாலிப்பாறை, தண்டியக்குளம், காந்திக்கிராமம், மேலபூசனூத்து, சாந்திபுரம், காமராஜபுரம் ஆகிய மலைக் கிராமங்களில் இருந்த 1000 க்கும்மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர்.
பள்ளி மாணவர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் ஆதிதிராவிட மாணவர், பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியும், மாணவிகளுக்கு தனி விடுதியும் திறக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு மாணவர் விடுதியிலும் 50 மாணவர்கள் படித்து வந்தனர்.

தற்போது வருஷநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நிலவும் சூழ்நிலை காரணமாக மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 300 மாணவ, மாணவியர்கள் மட்டும் படிக்கின்றனர். ஆனால், விடுதிகளில் மாணவர்கள் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை. பெரும்பாலும் உள்ளூர் மாணவர்களை சேர்த்து கொள்கின்றனர். அதிகாரிகள் ஆய்வு செய்யும் பொழுது மட்டும் உள்ளூர் மாணவர்களை விடுதி காப்பாளர்கள் வீடுதோறும் சென்று அழைத்து வந்து கணக்கு காண்பிக்கின்றனர்.
மற்ற நேரங்களில் விடுதி காப்பாளர்களும், சமையல்கார்களும் பங்கு போட்டு கொள்கின்றனர். இதனால், மாதந்தோறும் அரசின் பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது. வருசநாடு பகுதிகளில் மாணவர் விடுதிகளில் ஆய்வு செய்து போலியாக பதிவு செய்து வைத்திருக்கும் உள்ளூர் மாணவர்களை நீக்கம் செய்ய மாவட்ட கலெக்டர் நேரடி ஆய்வு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment