Thursday, January 23, 2014

பதவி உயர்வுக்கு டி.என்.பி.எஸ்.சி., கடும் எதிர்ப்பு

அரசு துறைகள், அதிகாரிகளுக்கு, தன்னிச்சையாக பதவி உயர்வு வழங்க அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,), எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

தகுதி வாய்ந்தவர்களுக்கு அரசு அலுவலர்களுக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கு முன், தகுதி வாய்ந்தவர்களுக்கான பதவி உயர்வு பட்டியலை தயாரித்து அதற்கு டி.என்.பி.எஸ்.சி.,யின் ஒப்புதலை ஒவ்வொரு அரசு துறையும் பெற வேண்டும். ஆனால், பல துறைகள், அப்படி ஒப்புதல் பெறாமல், தன்னிச்சையாக, பதவி உயர்வு வழங்குவதாக கூறப்படுகிறது. இரு பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பினால், ஒரு பணியிடத்தை, நேரடி போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்ய வேண்டும். ஆனால், இந்த விதிமுறையை மீறி பெரும்பாலான இடங்கள், பதவி உயர்வு மூலமே நிரப்பப்படுவதாக போட்டி தேர்வு எழுதுவோர் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் தான், குரூப் - 1 பணியிடங்கள், மிக குறைவாக வருகின்றன என்றும் கூறுகின்றனர்.
இந்த நிலையில், தன்னிச்சையாக, அலுவலர்களுக்கு, பதவி உயர்வு வழங்கும் விவகாரம் குறித்து, டி.என்.பி.எஸ்.சி., அதிருப்தி தெரிவித்துள்ளதாக, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில் வருவாய்த்துறைக்கு, கடிதம் அனுப்பி, விளக்கத்தை பெற்றதாகவும் கூறப்படுகிறது.
"தேர்வாணையத்தின் அனுமதி இல்லாமல், பதவி உயர்வு வழங்கக் கூடாது. விதிமுறைப்படி உரிய காலி பணியிடங்களை தேர்வாணையத்திற்கு வழங்க வேண்டும்" என அந்த கடிதத்தில், தேர்வாணையம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஒப்புதல் இல்லாமல் தேர்வாணைய செயலர், விஜயகுமாரிடம் கேட்ட போது, "தேர்வாணையத்தின் ஒப்புதல் இல்லாமல், அலுவலர்களுக்கு, பதவி உயர்வு வழங்கக் கூடாது; ஆனால், அதுபோல் நடக்கிறதா என தெரியவில்லை" என்றார்.

No comments:

Post a Comment