Monday, January 27, 2014

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு: ஜூன் மாதம் அறிமுகம்

நடப்பாண்டு மத்தியில், சோதனை அடிப்படையில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, கொச்சி, மைசூரு, ஜெய்பூர், புவனேஸ்வர், சிம்லா ஆகிய நகரங்களில் இந்த பிளாஸ்டிக் கரன்சிகள் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

இதற்கான ஒப்பந்த புள்ளிகளை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள கரன்சிகளில், பருத்தி இழைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றை விட பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை தயாரிக்க, இரு மடங்கு செலவாகும். அதே சமயம், பிளாஸ்டிக் நோட்டுகள் கறை படியாமல், நீண்ட காலம் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டவையாக இருக்கும். இந்த தொழில்நுட்பத்தில் கள்ள நோட்டுகளை தயாரிக்க முடியாது.
அதனால் கள்ள நோட்டு புழக்கம் குறைந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் துணை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனினும் இந்தியா போன்ற அதிக வெப்பமான நாட்டில் பிளாஸ்டிக் கரன்சியின் தன்மையை உறுதிப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதை அறியும் நோக்கில் தான் மாறுபட்ட தட்பவெப்ப நிலை கொண்ட ஐந்து நகரங்களில் சோதனை முறையில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

No comments:

Post a Comment