Sunday, January 19, 2014

அனுமதியின்றி கல்விச்சுற்றுலா அழைத்துசென்றால் கடும் நடவடிக்கை

அனுமதியின்றி கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு மார்ச், ஏப்., மாதங்களில் முழு ஆண்டு தேர்வு நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக மாணவர்களை கல்விச்சுற்றுலா அழைத்து செல்ல பள்ளிகள் தயாராகி வருகின்றன. கடந்த காலங்களில் கல்விச்சுற்றுலாவின்போது எதிர்பாராதவிதமாக சில மாணவர்கள் உயிரிழந்தனர்.

இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சுற்றுலாவிற்கு மாணவர்களை அழைத்து செல்வதற்கு முன் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். மாணவர்களின் செயல்பாடுகளை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
கல்வி சுற்றுலாவிற்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்க கூடாது. தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மாவட்ட தொடக்க அலுவலர்களிடமும், உயர்நிலைப் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர்களிடமும், மேல்நிலைப் பள்ளிகள் முதன்மை கல்வி அலுவலரிடமும், மெட்ரிக் பள்ளிகள், ஆய்வாளர்களிடம் அனுமதி பெறவேண்டும். அனுமதியின்றி மாணவர்களை அழைத்து சென்றால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment