Tuesday, November 11, 2014

குறுந்தகடுகள் வழியாகக் கற்பித்து பத்தாம் வகுப்பு தேர்ச்சியை அதிகரிக்க ரூ.1.50 கோடி ஒதுக்கீடு

மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, குறுந்தகடுகள் மூலமாக பாடங்களை நடத்திட தமிழக அரசு ரூ1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிக்க குறுந்தகடுகள் மூலமாக பாடங்களைக் கற்பிக்கும் மாநில அளவிலான அனிமேஷன் பயிற்சியை சென்னையில் தொடங்கி வைத்து அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:
அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குறுந்தகடுகள் வழியாக மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் பாடங்களைக் கற்பித்து, மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வேண்டுமேன்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
இதற்கென ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இவ்விழாவில், பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ் வரமுருகன், அனைவருக்கும் கல்வி இயக்க மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்ணி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் ச.கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment