Wednesday, November 5, 2014

துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாணவியருக்கு இடையே பேச்சு போட்டி மற்றும் கருத்தரங்கம்

துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், அரசு பள்ளி மாணவியருக்கு, இடையே பேச்சு போட்டி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.

திருத்தணி அரசினர் மகளிர் மேனிலைப் பள்ளியில், பாரத பிரதமர் நரேந்நிர மோடி அறிவித்து, துவங்கிய துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சுகாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் குப்பையை அகற்றுதல் போன்றவை குறித்து, மாணவியர் இடையே பேச்சு போட்டி மற்றும் ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.
இதில், 10க்கும் மேற்பட்ட மாணவியர் துாய்மையான இந்தியாவை உருவாக்க, நாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், முதற்கட்டமாக, தன், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் இருக்கும் குப்பையை அகற்றுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினர். தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட மாணவியர் திருத்தணி ரயில் நிலையத்தை சுத்தம் செய்தனர். நிகழ்ச்சியின் முடிவில், பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவியரை, தலைமை ஆசிரியை சுபாலட்சுமி பாராட்டி, பரிசுகள் வழங்கினார்.

No comments:

Post a Comment