Friday, November 7, 2014

பள்ளிகளில் கழிப்பறைகள் நிலை குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆய்வு

அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் நிலை குறித்து, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மாணவர்கள் அவதி
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 1,012 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 362 நடுநிலைப் பள்ளிகள், 334 அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. பெரும்பாலான பள்ளிகளில், துப்புரவு பணியிடங்கள் காலியாக இருப்பதால், குடிநீர் மற்றும் கழிப்பறைகள் சுகாதாரமின்றி காணப்படுகின்றன. இதனால் மாணவ, மாணவியர் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது.
இதை தவிர்க்க, பள்ளிகளில் கழிப்பறை நிலை குறித்து அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்து, இந்த வாரம் இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க ஊரக வளர்ச்சி துறை உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் இருந்து ஒரு குழு, பள்ளிகள் தோறும் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து வருகிறது.
அறிக்கை சமர்பிக்க...
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு பள்ளிகள் சுகாதார கழிப்பறை நிலை குறித்து இவ்வாரம் இறுதிக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என, வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை வந்த பின்னர் ஊரக வளர்ச்சி துறைக்கு பரிந்துரை செய்து, அனைத்து பள்ளிகளிலும், கழிப்பறைகள் சுகாதாரமான முறையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அரசு பள்ளிகள் சுகாதார கழிப்பறை நிலை குறித்து, இவ்வாரம் இறுதிக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment