Tuesday, November 11, 2014

அனைத்து குறுமைய பள்ளிகளுக்கான தடகள போட்டி

கோவை கல்வி மாவட்ட அனைத்து குறுமைய பள்ளிகளுக்கான தடகள போட்டி, பி.எஸ்.ஜி., சர்வஜன மேல்நிலைப்பள்ளி சார்பில் நடந்தது.
இதில், 19 வயது சூப்பர் சீனியர் மாணவர்களுக்கான பல்வேறு தடகள போட்டியில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:

100மீ.,-ஸ்டேன்ஸ் பள்ளி ஜோஸ்வா செல்லத்துரை, அனீஷ் செந்தில், சின்மயா வித்யா பள்ளி; 200மீ.,-ஸ்டேன்ஸ் பள்ளி அனீஷ்செந்தில், கார்மல் கார்டன் பள்ளி முகமது நதிம், பி.எம்.ஜி., பள்ளி தீபன்;
400மீ.,- பி.எஸ்.ஜி., சர்வஜன பள்ளி பிரதீப், இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி நவ்பில் ரஹ்மான், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி ரகுநந்தன்;
800மீ.,-சி.எம்.எஸ்.,பள்ளி ஹேமந்த் கண்ணன், பி.எஸ்.ஜி.,சர்வஜன பள்ளி பிரதீப், பிரசன்டேசன் கான்வென்ட் விஷ்ணு;
1,500மீ.,- சி.எம்.எஸ்., பள்ளி ஹேமந்த் கண்ணன், பிரசன்டேசன் கான்வென்ட் பள்ளி விஷ்ணு, மதுக்கரை அரசு பள்ளி மகேஷ்குமார்;
110மீ., தடை ஓட்டம்- சித்தாபுதுார் மாநகராட்சி பள்ளி விவேகானந்தன், அமிர்த வித்யாலயா பள்ளி ஆதர்ஷ் ராம், காருண்யா சர்வதேச பள்ளி டேவிட் சங்கா;
உயரம் தாண்டுதல்- சித்தாபுதுார் மாநகராட்சி பள்ளி விவேகானந்தன், எஸ்.பி.ஓ.ஏ.,பள்ளி சரவணன், கார்மல் கார்டன் பள்ளி ஸ்ரீஹரி;
நீளம் தாண்டுதல்- தம்பு பள்ளி சதீஷ்பாபு, வெங்கடலட்சுமி பள்ளி சரவணன், மாநகராட்சி பள்ளி சித்தாபுதுார் விவேகானந்தன்;
மும்முறை தாண்டுதல்- கார்மல் கார்டன் பள்ளி ராஜ்சூர்யா, தம்பு பள்ளி சதீஷ்பாபு, வித்யவிகாஷ் பள்ளி விஜய்பாலாஜி;
போல்வால்ட்-அமிர்த வித்யாலயா பள்ளி சதீஷ்குமார், கணபதி அரசு பள்ளி செல்வமுருகன், எம்.எஸ்.எஸ்.டி.,பள்ளி பிரகாஷ்;
குண்டுஎறிதல்- மணி பள்ளி மித்ரவருண், நேஷனல்மாடல் பள்ளி சுஜித், லிசியுக்ஸ் பள்ளி சச்சின் பிரனவ்;
வட்டுஎறிதல்- மணி பள்ளி மித்ரவருண், நேஷனல்மாடல் பள்ளி சுஜித், ஸ்டேன்ஸ் ஆ.இ.,பள்ளி அகில் மேனன்;
ஈட்டிஎறிதல்- ஒத்தக்கால் மண்டபம் ஸ்ரீஜித், எஸ்.ஆர்.எஸ்.ஐ.,மெட்ரிக் பள்ளி ஸ்ரீதர், தம்பு பள்ளி கிரேட் ஜோஸ் கிங்ஸ்லி;
4*100மீ.,தொடர்ஓட்டம்- ஸ்டேன்ஸ் பள்ளி, காருண்யா சர்வதேச பள்ளி, தம்பு பள்ளி; 4*400மீ.,தொடர்ஓட்டம்- பி.எஸ்.ஜி., சர்வஜன பள்ளி, எஸ்.பி.ஓ.ஏ.,பள்ளி, சி.எஸ்.ஐ.,ஆண்கள் பள்ளி.
நவ.,19, 20 தேதிகளில் ஊட்டியில் நடக்கவுள்ள மண்டல அளவிலான தடகள போட்டியில், முதல், 2வது இடங்களில் வெற்றி பெற்றவர்கள் பங்கேற்க தகுதி பெறுகின்றனர்.
இத்தகவலை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அனந்தலட்சுமி தெரிவித்தார்.

No comments:

Post a Comment