Thursday, November 27, 2014

சென்னை அண்ணா பல்கலையில் 5 புதிய படிப்புகள் துவக்கம்

அண்ணா பல்கலையில் இரண்டு மற்றும் பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் 3 என, மொத்தம் ஐந்து புதிய படிப்புகள் துவக்கப்படுகின்றன.
இவற்றிற்கு, அடுத்த மாதம் 3ம் தேதி நடக்கும் கல்விக் குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படுகிறது. சென்னை, அண்ணா பல்கலையில், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, கல்விக் குழு கூட்டம் நடக்கும். இதில், பாடத்திட்டத்தில் மாற்றம், புதிய படிப்புகள் துவக்குதல், தேர்வு முறையில் மாற்றம் செய்தல் உள்ளிட்ட, பல்வேறு நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும்.

அடுத்த கல்விக்குழு கூட்டம், டிச., 3ம் தேதி நடக்கிறது. இதற்காக, பல்கலையில் உள்ள, எட்டு பிரிவுகளின் கீழ் உள்ள துறைகள் வாரியான கூட்டம், இம்மாதம், 7, 8, 10, 11 தேதிகளில் நடந்தது.
இதில், சில புதிய படிப்புகள் கொண்டு வருவதற்கான பரிந்துரைகள் வைக்கப்பட்டுள்ளன. முதலாண்டு அளவில், புதிய படிப்புகள் துவக்கப்பட்டாலும், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான ஒப்புதல், கல்விக்குழுவில் பெறப்பட உள்ளன.
இதன்படி, அண்ணா பல்கலையில், எம்.டெக்., கம்ப்யூட்டிங் அண்டு டெக்னாலஜி - எம்.பி.ஏ., டூரிசம் மேனேஜ்மென்ட் ஆகிய, இரண்டு படிப்புகள், பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில், பி.இ., அக்ரி இன்ஜினியரிங் - பி.டெக்., உணவு தொழில்நுட்பம் - எம்.டெக்., ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகள் துவக்கப்படுகின்றன.
அதேபோல், ஐந்தாண்டு எம்.எஸ்சி., ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் மல்டிமீடியா ஆகிய படிப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. இது அடுத்தாண்டு முதல் அமலுக்கு வருகிறது.

No comments:

Post a Comment