Saturday, November 1, 2014

"கல்வியில் இந்திய அளவில் தமிழகமும், மாநில அளவில் திருப்பூரும் முன்னேற்றம் கண்டுள்ளன'

"கல்வியில், இந்திய அளவில் தமிழகமும், மாநில அளவில் திருப்பூரும் முன்னேற்றம் கண்டுள்ளன&'&' என்று அமைச்சர் ஆனந்தன் பேசினார்.
பள்ளி கல்வித்துறை சார்பில், இலவச லேப்-டாப் வழங்கும் விழா, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் நடந்தது; முதன்மை கல்வி அலுவலர் முருகன் வரவேற்றார். கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.

மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கி, வனத்துறை அமைச்சர் ஆனந்தன் பேசியதாவது: தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளும் தரத்துடன் செயல்பட வேண்டும். பொருளாதார தடையால், மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக, தமிழக அரசு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி, 16 வகையான கல்வி நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய சிறப்பான திட்டங்கள், வேறெந்த மாநிலத்திலும் கிடையாது. இத்திட்டங்களால், கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய அளவில் தமிழகம் எட்டாவது இடத் துக்கும், மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் 11வது இடத்துக்கும், கல்வியில் முன்னேறியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், கடந்தாண்டு பிளஸ் 2 முடித்த ஜெய்வாபாய் பள்ளி மாணவியர் 1,209 பேருக்கும், அய்யங்காளிபாளையம் அரசு பள்ளி மாணவ, மாணவியர் 245 பேருக்கும், 2.44 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச லேப்-டாப் வழங்கப்பட்டது. மேயர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன், மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட கல்வி அலுவலர் கரோலின் நன்றி கூறினார். தொடர்ந்து குமார் நகர் பிஷப் உபகாரசாமி பள்ளி, அனுப்பர்பாளையம் அரசு பள்ளி, குமார் நகர் மாநகராட்சி பள்ளி, நஞ்சப்பா பள்ளி, கே.எஸ்.சி., அரசு பள்ளி, பழனியம்மாள் பள்ளி, இடுவம்பாளையம் அரசு பள்ளி, விஜயாபுரம் அரசு பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில், மாணவ, மாணவியருக்கு இலவச "லேப்-டாப்&' வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment