Tuesday, September 24, 2013

கூடுதல் கட்டண வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு மாணவர் – பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் மாநில கூட்டம், சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், சங்கத்தின் தலைவர் அருமைநாதன், முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை விட, தனியார் பள்ளிகள், கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. இது போன்ற பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயிப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட பள்ளி பெற்றோரின் கருத்துக்களை கேட்டறிய, குழு முன்வர வேண்டும். இதற்கு, தற்போதைய சட்டத்தில் இடமில்லை. எனவே, தனியார் பள்ளிகள் கட்டண ஒழுங்குபடுத்துதல் சட்டத்தில், திருத்தம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment