Thursday, September 26, 2013

பிளஸ் 2 வரைவு பாடத்திட்டம்; இன்றைய கூட்டத்தில் முடிவு

பிளஸ் 2, வரைவு பாடத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து, இன்று நடக்கும் உயர்நிலை குழு கூட்டத்தில், முடிவு எடுக்கப்படுகிறது.
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டங்கள்
தயாரிக்கப்பட்டுள்ளன. சென்னை, ஐ.ஐ.டி., பேராசிரியர், நாகபூஷணம் தலைமையிலான, ஆசிரியர் குழு, வரைவு பாடத்திட்டங்களை தயாரித்துள்ளது. இதற்கு, மாநில கல்வி வாரியம், சமீபத்தில், ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, அமைச்சர் பழனியப்பன் தலைமையிலான உயர்நிலை குழு கூட்டத்தின் ஒப்புதலை பெறுவதற்காக, இன்று, டி.பி.ஐ., வளாகத்தில், கூட்டம் நடக்கிறது.
வரைவு பாடத்திட்டம் குறித்து, மாநில ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும், நிபுணர் குழுவும், உயர்நிலை குழுவிற்கு, விளக்க உள்ளன. அதையடுத்து, உயர்நிலை குழு ஒப்புதல் அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின், தமிழக அரசின் ஒப்புதலுக்கு, வரைவு பாடத்திட்டம் அனுப்பி வைக்கப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு, ஒப்புதல் அளித்ததும், பாடத்திட்டங்கள் எழுதும் பணி துவங்கும். பிளஸ் 1 வகுப்பிற்கான புதிய பாடத்திட்டம், வரும், 2015 – 16ம் கல்வி ஆண்டில் அமலுக்கு வருகிறது. பிளஸ் 2 பாடத்திட்டம், 2016 – 17ம் ஆண்டில் அமலுக்கு வரும்.

No comments:

Post a Comment