Thursday, September 26, 2013

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் இனி பதவி வகிப்பார் அரசிதழ் வெளியிடப்பட்டது

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் பதவியில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் அமர்த்தப்பட்டு வந்தனர். அந்த கல்வி நிறுவனத்துக்கு இடம் மற்றும் நிதி வழங்கியதற்காக, அந்த குடும்பத்தினருக்கு 1929–ம் ஆண்டு முதல் பதவி வழங்கப்பட்டு வந்தது.
சமீபகாலமாக தொழில் அதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி அந்த பதவியில் இருந்து வந்தார். இந்த நிலையில் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டதாக கூறி, அந்த கல்லூரி நிர்வாகத்தை அரசே முழுவதும் எடுத்துக்கொள்வதற்கான மசோதாவை சட்டசபையில் தமிழக அரசு தாக்கல் செய்தது.
பின்னர் அந்த மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே அதை அரசிதழாக தமிழக அரசு 24–ந்தேதி வெளியிட்டது. அரசிதழ் வெளியிடப்பட்டதை அடுத்து, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அரசு கொண்டு வந்துள்ள நிர்வாக மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் பதவியை இனி தமிழகத்தின் உயர் கல்வித்துறை அமைச்சர் வகிப்பார்.
அரசிதழில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment