Tuesday, September 24, 2013

பார்வை குறைபாடுள்ள மாணவர்கள் படிப்பதற்கு "மேக்னிபையர்" கருவி

பார்வைகுறைபாடுள்ள மாணவர்கள் படிப்பதற்கு எளிதாக பாக்கெட் அளவு "வீடியோ மேக்னிபையர்" கருவி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

பார்வை குறைபாடுள்ளவர்கள், "மேக்னிபையர்" கருவி மூலம் எளிதாக புத்தகத்திலுள்ள எழுத்துக்களை படிக்கலாம். இக்கருவியின் விலை ரூ.10,500. அனைத்து மாவட்டங்களிலும் இக்கருவி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இக்கருவி வழங்கப்படுகிறது. பார்வைகுறைபாடுள்ள மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களிலுள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து பெறலாம்.
ஆர்.ஜனனி, (எம்.வி.எம். கல்லூரி மாணவி, திண்டுக்கல்: "பி.ஏ., ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் இலவசமாக "மேக்னிபையர்" கருவி கொடுத்துள்ளனர். இதன்மூலம், பாடபுத்தகங்களை எப்படி படிப்பது என்பதை அறிந்துகொண்டேன். இனி அடுத்தவர் துணையின்றி பாடபுத்தகங்களை எளிதாக படிக்க முடியும் என நம்புகிறேன்," என்றார்.

No comments:

Post a Comment