Tuesday, September 24, 2013

மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க ஆன்லைன் பிரச்சாரம்

மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க "சேவ் மை புக்" என்ற தலைப்பில் ஆன்லைனில் பிரச்சாரம் துவங்க இணையதளம் ஒன்றை துவங்கியுள்ளது.

www.change.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் தங்களின் மனுவை சமர்ப்பிக்கலாம். இந்த இணையதளத்தில் பெற்றோர்கள் தங்களின் கருத்துகளை பரிமாறிக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் இணையதள வசதி துவங்கி ஒரு வாரத்திற்குள் 500 பேர் இதில் ,இணைந்துள்ளனர்.
உடல் எடையை விட 10 சதவீதத்திற்கும் அதிகமாக புத்தக எடை  உள்ளதென்று பெற்றோர்கள் அளித்த புகாரின் பெயரில் இந்த இணையதளம் துவங்கியுள்ளது. மாணவர்களின் புத்தக சுமை குறிப்பிட்ட எடைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாக கருதப்பட்டு, என்ஜிஓ உதய் பவுன்டேஷன் இந்த இணையதளத்தை துவக்கியுள்ளது.

No comments:

Post a Comment