Tuesday, September 24, 2013

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தனி தேர்வு துவங்கியது

பிளஸ் 2 தனித் தேர்வுகள், மாநிலம் முழுவதும், 114 மையங்களில் துவங்கின. நேற்று, மொழி முதல்தாள் தேர்வு நடந்தது. தொடர்ந்து, வரும், 2ம் தேதி வரை நடக்கும் தேர்வை, 42 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு தனித்தேர்வு, மாநிலம் முழுவதும், 124 மையங்களில் துவங்கின.
47 ஆயிரம் மாணவ, மாணவியர், தேர்வை எழுதுகின்றனர்; வரும், 5ம் தேதி வரை, தேர்வுகள் நடக்கின்றன. வரும், 2014, மார்ச், ஏப்ரலில் நடக்கும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், முறைகேடு எதுவும் நடக்காத அளவிற்கு, பல்வேறு கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை, தேர்வுத்துறை அமல்படுத்த உள்ளது.

அனைத்து தேர்வுகளுக்கும், &'பார்கோடிங்&' முறையில், &'டம்மி எண்&' பதிவதுடன், மாணவரின் புகைப்படத்தையும், விடைத்தாளின் முதல் பக்கத்தில் அச்சிட்டு வழங்க, தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த புதிய திட்டம், நேற்று துவங்கிய தனித்தேர்வில், சோதனை ரீதியில், அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம், வெற்றிகரமாக அமைந்துள்ளதாக, தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எந்த பிரச்னையும் இல்லாமல், தேர்வு நடந்ததாகவும், அவர்கள் தெரிவித்தனர். எனவே, இத்திட்டம், வரும் பொதுத்தேர்வில், கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment