Saturday, September 14, 2013

ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி திட்டம்

ஏழை மாணவர்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்ற நோக்கில் சென்னை பல்கலைக்கழகத்தில் இலவசக் கல்வி திட்டம் 2011ல் துவங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்றுள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில், இளங்கலை படிப்பில் மாணவர்கள் இலவசமாக கல்வி கற்க முடியும். இந்த ஆண்டு இத்திட்டத்தில் கல்வி பயில 430 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களில் 365 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். முதல் தலைமுறை பட்டதாரி 2 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக வருமானம் உள்ளோர், வீடு, நிலம் இல்லாதோர் உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில், 97 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இம்மாணவர்கக் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 46 கல்லூரிகளில் பி.காம், பி.எஸ்சி, பி.சி.ஏ உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் கல்வி கற்க உள்ளனர்.

No comments:

Post a Comment