Monday, September 16, 2013

வினாத்தாள்-விடைத்தாள்களை பாதுகாக்க தேர்வுத்துறை நடவடிக்கை


எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கையை தேர்வுத்துறை எடுத்துள்ளது. விடைத்தாள்களை தபால் துறை மூலம் அனுப்புவதற்கு பதிலாக வேறு வாகனங்களை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.விடைத்தாள் சேதம் கடந்த வருடம் எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் விடைத்தாள் கட்டுகள் விருத்தாசலம்
அருகே ரெயில்வே தண்டவாளத்தில் சிதறிக்கிடந்தன. அதுபோல கடந்த 2008-ம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் விடைத்தாள்கள் தீவிபத்தில் சேதம் அடைந்தன.மேலும் வினாத்தாள்களில் அச்சுப்பிழை இருந்தது. இப்படி பிழை வராமல் இருக்கவும், வினாத்தாள், விடைத்தாள்கள் பாதுகாப்பாக இருக்கவும் தேர்வுத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று தேர்வுத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-வேறு வாகனங்கள் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுக்கு வினாத் தாள்களை தேர்வு மையங்களுக்கு வினியோகிக்கவும், மாணவர்களின் விடைத்தாள்களை தேர்வு மையங்களில் இருந்து சேகரித்து மதிப்பீடு செய்யும் மையங்களுக்கு கொண்டு செல்லவும் தபால்துறை வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு ரூ.4 கோடி வரை செலவாகிறது. ஆனால் அந்த அளவுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படவில்லை. எனவே தபால் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தாமல் வேறு வாகனங்களை அமர்த்தலாம் என்று திட்டமிட்டு உயர் அதிகாரிகளின் முடிவுக்காக அனுப்பி உள்ளோம். பாதுகாப்பு நடவடிக்கைமேலும் வினாத்தாள் வெளிமாநிலங்களில் தான் அச்சடிக்கப்படுகின்றன. அச்சடிக்குமுன் 4 முறை சரியாக பிழை பார்த்து திருத்தப்படும். தமிழ்நாட்டில் பிழை பார்க்க முடியாது. அப்படி பார்த்தால் கேள்வித்தாள் வெளியாகி விடும்.இந்த வருடம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வை சிறப்பாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். வினாத்தாள் மற்றும் விடைத்தாள் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment