Monday, September 16, 2013

தமிழக அரசு அலுவலர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த கோரிக்கை

மத்திய அரசு அலுவலர்களை போல் தமிழக அரசு அலுவலர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்தவேண்டும் என தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு அரசு அலுவலர் கழகத்தின் மாநில தலைவர் சௌந்தர்ராஜன் கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்கு மாலை அளித்த பேட்டியில்-

மத்திய அரசு ஊழியர்களைபோல தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும். அரசு ஊழியர்கள் தங்களது பணியையும் மக்களுக்கு சேவையையும்தான் செய்கின்றனர் எந்தவித தொழிலும் செய்யவில்லை. எனவே ஊழியர்களிடம் தொழில்வரி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும்.பணி காலத்தில் இறக்கும் அரசு ஊழியர்களின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணி நியமனம் சுணக்கமாக உள்ளது. இதனால் இறந்த ஊழியர்களின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து துறையிலும் கருணை அடிப்படையில் 10 சதவீதம்தான் நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள 90 சதவீத பணியிடத்தையும் நிரப்ப வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும்.
தமிழக அரசு புதுப்புது திட்டங்களை அறிவிக்கிறது. ஆனால் அவற்றை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டுமெனில் காலியாக உள்ள இரண்டரை லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.தமிழக அரசு ஊழியர்களின் வருமான வரி உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் அரசு ஊழியர்களுக்கு உரிய ஈட்டுப்படியை வழங்க வேண்டும்.பட்டப்படிப்பு படித்த அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு நிறுத்தியுள்ள ஊக்கத்தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும். பணி காலத்தில் இறக்கும் அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றார்.
தஞ்சை மாவட்ட தலைவர் கருணாநிதி, செயலாளர் தர்ம கருணாநிதி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment