Friday, September 6, 2013

சி.பி.எஸ்.இ., தேர்வு முறையில் மாற்றம்

 சி.பி.எஸ்.இ., (Central Board of Secondary Education) பள்ளியில், 9 மற்றும் 10வது படிக்கும் மாணவர்களுக்கு, முக்கிய பாடங்களின் வினாத்தாள்கள் ஆன்லைன் மயமாக்கப்பட்டு, அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் ஒரே வினாத்தாள் முறை வர உள்ளது. இதன் மூலம் மாணவர்களின் தரத்தை மேம்படுத்த, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது. இது இந்த கல்வி ஆண்டில்( 201314), படிக்கும் மாணவர்களுக்கு, செப்.16 முதல் நடைமுறைக்கு வருகிறது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 9 மற்றும் 10வது படிக்கும் மாணவர்களின் முக்கிய பாடங்களான, கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், ஆங்கில மொழி மற்றும் இலக்கியம், இந்தி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கம்யூனிகேட்டிவ் சமஸ்கிருதம் ஆகிய பாடங்களுக்கு, இந்தியா முழுவதும் ஒரே வினாத்தாள் முறை வருகிறது.
இதற்காக இரண்டு வகையான வினாத்தாள்கள் ஆன்லைன் மூலம் அனுப்பப்படும். வினாத்தாளை பாதுகாப்பாக அனுப்பும் வகையில், இதற்கான சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற பாடங்களுக்கு அந்தந்த பள்ளியே வினாத்தாளை தேர்வுசெய்யும் என சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment