Wednesday, September 18, 2013

9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் மாற்றம்

சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி அடைவதற்கான விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

9ம் வகுப்பு மற்றும் 10 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வருடத்திற்கு இரண்டு முறை நடக்கும் "சம்மேடிவ் அசெஸ்மென்ட்"ல் (Summattive Assessment) கண்டிப்பாக கலந்துகொண்டு 25 சதவிகித மதிப்பெண்களை பெற்றிருக்க வேன்டும்.
அதே போன்று 5 பாடங்களிலும் 33 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் வருடத்திற்கு 4 "ஃபார்மேடிவ் அசெஸ்மென்ட்" (Formative Assessment) தேர்வுகளில் கலந்துகொண்டிருக்க வேண்டும். இத்தேர்வுகளுக்கான வினாத் தாள்கள் சி.பி.எஸ்.இ. வாரியத்தால் அளிக்கப்பட்டு பள்ளிகளால் நடத்தப்படும்.
மேற்கண்ட நடைமுறைகள் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு (2013-2014) முதலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு(2014-2015) முதலும் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment