Sunday, September 8, 2013

அறிவியல் பட்டதாரிகளுக்கான சர்வதேச போட்டிக்கான தகுதித் தேர்வு

 அறிவியல் பாடங்களில் சர்வதேச அளவில் நடத்தப்படும் 2014 போட்டிகளில் (International Olympiads) கலந்து கொள்ள வழிவகை செய்யும் நேசனல் ஒலிம்பியாட் திட்டத்தை IAPT மற்றும் HBCSE அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன. இதில் கலந்துகொள்ள தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


2014 போட்டியில் கலந்துகொள்ள தகுதியான பாடப்பிரிவுகள்: Physics, Chemistry, Biology, Astronomy, Junior Science
பிரிவு: Olympiads in Physics, Chemistry and Biology
கல்வித் தகுதி: 30.11.2013 தேதிப்படி +2 அல்லது அதற்கு கீழ் உள்ள வகுப்பில் அறிவியல் பிரிவு மாணவர்களாக இருத்தல் வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.1994 அன்று அதற்கு பின் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
பிரிவு: Astronomy Olympiad
கல்வித் தகுதி: 30.11.2013 தேதிப்படி +2 அல்லது அதற்கு கீழ் உள்ள மாணவர்களாக இருத்தல் வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.1995 அன்று அல்லது அதற்கு பின் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
பிரிவு: Junior Science Olympiad
கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு அல்லது அதற்கு கீழ் உள்ள மாணவர்களாக இருத்தல் வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.1995 அன்று அல்லது அதற்கு பின் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
Olympiad Programme 5 நிலைகளில் நடைபெறும். முதல்நிலை Indian Association of Physics Teachers(IAPT)  அமைப்பின் மூலமும், இதர நிலைகள் HomiBhabha Centre for Science Education (HBCSE)  அமைப்பின் கீழ் நடத்தப்படும்.
தொடக்க நிலையான National Olympiad-ல் தகுதி பெறுபவர்கள் மட்டுமே அடுத்த நிலைக்கு செல்ல முடியும்.
தொடக்க நிலை தேர்வு நடைபெறும் தேதி: 24.11.2013
பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 15.09.2013
மேலும் முழுமையான தகவல்கள் அறிய http://olympiads.hbcse.tifr.res.in , www.iapt.org.in, http://olympiads.hbcse.tifr.res.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
முதல் நிலை தேர்வு பற்றிய சந்தேகங்களுக்கான தெளிவு காண தொடர்புக்கு Prof.M.L.Ogalapurkar, Chief Co-ordinator (IAPT Examinations) IAPT Office, 61, Sheela Vihar Colony, &, Heramb Co-op HSG Society, Near Kimaya Hotel, Karve Road, Kothrud, Pune - 411038, Tel. Office: 020 - 25420163, 020 - 20252754 மேற்கண்ட எண்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். E-mail:iaptpune@gmail.com மூலமும் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment